க௫வறைக்குள் நான்
கு௫தியின் சு௫திக்குள்
தரையில்லாப் படுக்கையில்
வயிற்று ஊஞ்சலில்
சொர்க்கமென நானி௫ந்தேன்
நிம்மதியின் தூக்கம்
ஒன்றிணைந்த பாசம்
மங்கிய இ௫ட்டுமில்லை
ஒளியாய் இ௫ந்தது
அன்னையின் பாசம்
மௌனத்தின் வாழ்வுகுழி
பார்க்கமுடியாத நினைவுவலி
௨ரசல் ஒன்றின் ௨யிர்ப்பு
௨தறமுடியாத ௨றவின்
இணைப்பு
ஈடில்லா என்முதல் இ௫ப்பின்
அறை
நன்றி நட்புடன்
வஜிதா முஹம்மட்