இனிமை நிலைத்திருக்க இதயத்தால் வாழ்த்துகிறேன்
ஆனந்தம் நிலைத்திருக்க அன்புடன் வாழ்த்துகிறேன்
மகிழ்ச்சி நிலைத்திருக்க மனதார வாழ்த்துகிறேன்
நீண்ட ஆயுளோடு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி அக்கா
- 16/12/2022
- https://www.youtube.com/watch?v=2XVmsTaKUfo
வாணி மோகன் அவர்களிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அன்பாக,ஆதரவாக,இனிமையாக,கனிவாக பேசி அனைவரையும் கவர்ந்திட்ட கலைவாணி மோகனுக்கு இனிய,இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.சீரோடும்,சிறப்போடும் வளமாய்,நலமாய் நீடுவாழ வாழ்த்துகிறோம்..
கலைவாணி மோகன்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் என்றும் நலமாக வளமாக நினைத்த காரியங்கள் யாவும் சிறப்புடன் நிறைவேற இறையாசியுடன்
வாழ்த்துகின்றேன்
வாணியக்காவிற்கு எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குடும்பத்துடன் இணைந்து நீண்டகாலம் நோயின்றி வாழ இந்த இனிய நாளில் வாழ்த்துகின்றோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாணி
என்றும் இளமையாக இனிக்க இனிக்க பேசி அனைவரையும் அன்புடன் அரவணைத்து மகிழும் புன்னகைராணி அரோக்கியமாக வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி அக்கா💐
தெய்வங்களின் ஆசிகள் நிறைந்த புதிய அகவைக்குள்ளே….மனம்நிறைந்த சந்தோஷங்களுடன் நலங்களும் நிறைந்திடட்டும்….தெளிவான ஆளுமைகள் உச்சம் தொட்டிடட்டும்….மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பான வாணிமோகன் ….பல்லாண்டுகளாக வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி மாமி 🎂🎉🎂🎂🎂🎂
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாணி அக்கா 🎂🎉🎂🎂 . மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி. நீங்கள் நினைக்கும் எண்ணங்கள் யாவும் என்றும் மகிழ்வாக நிறைவேறி சுகபலத்துடன்வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இனிய இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி மாமி!! 🥳❤️💐
எங்கள் அன்புக்கினிய வாணி அக்காவுக்கு இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .
பல்லாண்டு காலம் வாழ இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைவாணி அவர்களே,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணிஅக்கா 😀
வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉
பாமுகம் தந்த அக்கா
பாசமான அக்கா
கலைவடிவிலான அக்கா
கலைவாணி அக்கா
அன்பாக பேசும் அக்கா
எங்கள் வாணிஅக்கா
பிள்ளைகளை தட்டிக்கொடுத்து
அன்பை அள்ளிக்கொடுப்பாரே
குடும்பசார்பான வாழ்த்துக்கள் அக்கா
மகிழ்ச்சியாக வாழுங்கள் 💐
எமது பாமுக தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எமது குடும்பம் சார்பாக தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி🎂🎂🎂
வாழ்க்கை என்ற கடலில், மகிழ்ச்சி என்ற படகில், வாழ்நாளெல்லாம் பவனி வந்து, வளம் பல பெற்று வாழ்க நீடுழி, வளர்க வையகத்தில் நின் புகழ்..! பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாணி மோகன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் மகிழ்வுடனும் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துக்கள்
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாணி மோகன்.வளமோடும் நலமோடும்
என்றும் புன்னகையோடு வாழ்க பல்லாண்டு.
இனிய உற்சாக வணக்கம் வாணி ஆன்ரி
இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாணி அக்கா🎗
என்றும் இளமையாய் உற்சாகமாய் இனிமையாய் உறவாய் அக்காவாய் அன்போடு என்நாளும் சிறக்க வாழ்க பல நூறு ஆண்டு என வாழ்த்தி மகிழ்கிறோம் பாமுக பந்தலின் பார்கவிக்கு என்றும் இனிய பிறந்த நன் நாள் வாழ்த்துக்கள் வாணி அக்கா❤️😊
இனிய அகவை ஒன்று
நிறைந்திருக்க
இன்பமழை உமை நனைக்க
வேண்டும் வேண்டும்
பலகோடி மகிழ்வுகள்
உங்கள் உளம் சேரப்
பல்லாண்டு பல்லாண்டு
வாழிய கலைவாணி
கனிவாய் கவர்ந்தீர் நம்மை
இன்னும் நூறு நூற்றாண்டு
காலம் திங்கள் முகமென
தித்திக்கும் பேச்சென
சீர்தூக்கும் புன்னகையுடன்
வாழ்க பல்லாண்டு!!!
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி. என்றும் மகிழ்வுடன் வாழ்ந்து நீங்கள் எண்ணும் எண்ணங்கள் யாவும் நிலையாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.
ஆண்டுகள் பலவாய்
ஆதவனின் ஒளியாய்
பிரகாசிக்கும் எங்கள்
பாமுத்தின் ஒரு முகத்திற்கு
இன்று பிறந்த நாள்
வாழ்வில் வளமுடன்
எண்ணங்கள் நிறைவேற
பல்லாண்டு வாழ்கவென
வாழ்த்துகின்றோம் எம்
அன்பான வாணியக்காவை.
என்றென்றும் உங்களுக்கே
உரிய புன்னகையுடனும் மிடுக்குடனும்
வாழ வாழ்த்துகின்றோம்.🎈💐🎁🎂❤️💌🎉.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வாணிஅக்கா.பாமுகத்து ராணி,சிரிப்பொலி அரசி என்றென்றும மகிழ்வோடு ,உடல்உள பல நிறைவோடு வாழ்க…வாழ்க வாழ்க பலநூறாண்டுகள்….🎂💐💗
உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் குடும்பத்துடனும் மகிழ்வுடனும் வாழ வாழ்த்துகிறோம்
கலைவாணி மோகனின் 16.12.2022 அகவையில்
*******************************
கொண்டாடுவோம் எல்லோரும்
சேர்ந்து கொண்டாடுவோம்
வாணியின் பெயரை சொல்லி
எல்லோரும் கொண்டாடுவோம்
இல்லற வாழ்வில் குதூகல அழகில்
பணிகளில் சிறந்து பண்புடன் வாழ
வாழ்வும் வளமும் சிறப்புடன் அமைய
கொண்டாடுவோம் கை தட்டி கொண்டாடுவோம்
என்றும் நலமுடன் சேர்ந்து மகிழவே
நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழவே
இறையாசியுடன் வாழ்த்துக்கூறி
கைதட்டி கொண்டாடுவோம்
வாணியின் பெயரைச்சொல்லி
பாமுக உறவுகள் சேர்ந்து கொண்டாடுவோம்
வாழ்வும் வளமும்
என் அன்பு தங்கை திருமதி. கலைவாணி மோகன் அவர்கட்கு! எனது இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் இறைவன் உடல், உள,ஆன்ம, சுகங்களோடு இன்னருள் தந்து இறையருள்பாலிக்க வேண்டுகின்றேன். “வாழ்க வளமுடன்.”
அன்பு அண்ணன்,
டேவிட்.(பிரான்ஸ்)