சந்தம் சிந்தும் கவிதை

v

மா வீரரே

ஊர் இழந்து திரிந்தோரை
உக்கார வைத்த இனம்

தன்நாட்டைப் பறிகொடுத்து
தனுயிர் காக்க முடியாமல்

போராடி மடியும் மாவீரர் இவர்கள்
எதுவுமே அறியாமல் போர்முனையில் குண்டுமழைகளாலும் எறிகனைகளளும் கடத்தப்பட்டும்
துடித்துப்போகும் உறவுகளும்
நவீனத்து மாவீரர்களே

சொந்த நாட்டுக்குள் மின்சாரம் குடிநீர் தடையாக்கி
மீண்டும் ஓர் முள்ளிவாய்க்கால்
என் உறவுறின் துடிப்பலைகள்
ஏங்கியங்கும் எனிதயத்தின்
மாறவடு மாவீரர்கள்

பறிகொடுத்தவனும் தாக்குகின்றான்
பறுத்தவனும் தாக்குகின்றான்
சும்மா பறிபோகும் உறவுகள எல்லாம் தற்கால மாவீரர்

நேருக்கு நேர் தாக்காத
உறவுகளின் கதறல்
சரிந்துவிழும் கட்டிடநசிவுகளின் சிதறல்

மருத்துவமனையிலும் மாவீர சரித்திரம்
மனிதநேயம் நன்றிவுணர்வு இழந்த மிருகத்தைவிட கேவலம்

வழக்காடமுடியாமல் வதைபடும்
உறவுகள்
பாவப்பட்டு இடம்கொடுத்த பரிதாப மாவீரர்

பத்துவீதம் மீதம்வைத்து பதித்துவைத்தான் கிட்டலர் என்று
இவர்களின் குணம் அறிய பறிபோகும் பாலஸ்தீனம் இன்று

உலகம் முமுவதுமே விதை தூவிய மாவீர் போதும்
உயிரினை எடுக்க உருவாக்கிய
இறைவனைத்தவிர தாய்க்கும் உரிமையில்லை பாரும்

வாழ்வது ஒருமுறைதான்
வந்தவர் போனால் திரும்ப சிறைதான்

ஆடையின்றிப் பிறந்தோம்
ஆசையின்றி வாழ்ந்தோமா

அள்ளிநாம் சேர்த்தாலும் கிள்ளிநாம் கொண்டு போவோமா மனிதா

விதைத்துட்ட மாவீரர் போதும்
விறைத்து மனம் துடிக்கின்றது கேளும்

வஜித்தா முகமட்