வியாழன் கவிதை

Selvi Nithianandan

மனமார வாழ்த்துகிறேன் ( 546)

சந்தம் சிந்திடும் கவியே
சிந்து பாடிடும் தமிழே
சந்து பொந்து ஓடியே
வந்து கொண்டாய் இருநூறாய்

ஒன்று இரண்டாய் இலக்கமாகி
ஒற்றுமை பலரின் படைப்பாகி
ஓயாத செவ்வாய் தொடராகி
ஒய்யாரமாய் பாக்களின் கோப்பாகி

நான்கு ஆண்டுகளின் பரவசம்
நல் கவிகளின் ஊற்றுக்களாய்
நாற்திசையும் பல கவிஞர்களாய்
நல்தொகுப்பினை வடிப்பாரே பாவையவர்

தவறினை சுட்டிக் காட்டியே
தரும் பாங்கின் அற்புதம்
தடம்மாறத் தரம்பாக்காத குணமே
தரணிக்கு தந்திட்ட பொக்கிஷம்