உலகின் நிலைமாற, என்னென்ன கொண்டு வருகிறாய்.( 596)
புதிய ஆண்டாய் மலர்ந்ததே
புதுமை பலதும் பூக்கவே
புத்துணர்வும் சிறக்கவே
புன்னகையாய் நிறைக்கட்டும்
பாசமாய் உறவுகள்
பகிரும் வார்த்தைகள்
வேசமாய் இல்லாது
விசுவாசமாய் நிறையட்டும்
கடந்துவந்த பாதைகள்
கடினமான வேதனை
கல்லும் முட்களாய்
கண்ணீர்க் கோலங்கள்
விதியின் சதியென
விளையாட்டாய் சொல்லியே
கதியல்ல காரிகையாள்
கம்பீரமாய் நடந்திடவே
உலகின் நிலைமாறவே
சுழலுகின்ற பலநாடுகள்
யுத்தம் ஒன்றைவிலக்கினால்
யுகமே மகிழ்வின் முடிவாகும்