வியாழன் கவிதை

Selvi Nithianandan

மெல்லக் கழியுதே நாளும் (550)

நாட்காட்டியும் நலிவுற்றபோக
நாலாபக்கமும் விலைவாசிஉயர
நற்பொழுதுகூட இருளாகிப்போக
நாட்டமாய் நானும் எழுந்தேஓட

புதுவருடம் குளிருடன் பிறக்க
புதுவரவுகளும் குடும்பத்தை நிறைக்க
புலத்துவாழ்வும் சலிப்பின்றி சிறக்க
புதியதொரு ஆண்டாய் சிறக்குமே

பணம் என்னும் பாரியபோராட்டம்
பில் குவியும் திண்டாட்டம் பலருக்கு
வருட முடிவு வசதியாய் வந்துவிழ
அசதிகாட்டி விட்டா வந்திடும் மறுதுண்டாய்

பள்ளியும் விடுமுறை ஒருபுறம்
நத்தார் கொண்டாட்டமும் மறுபுறம்
கடைகள் தெருக்கள் மக்கள்கூட்டம்
கனமான விடியலாய் நகரும் காலம்