நிலாவிலும் உலா
அண்ட வெளியிலே
ஆட்சி துணையிலே
அகிலம் எங்குமே
உலாவும் நிலாவே
அன்னம் ஊட்டவே
அன்னை உன்னையே
ஆசை காட்டியே
அழகு நிலாவே
நிலவின் ஒளியிலே
நிதமும் விண்மீனாய்
நீளும் பயணமாய்
உலாவும் வடிவமே
நிலவுப் பயணமாய்
நீல்ஆம்ஸ்ட் றோங்குமாய்
வரலாறு படைத்திட்ட
அமைதிதளம் என்னுமே
பெயரும் பெற்றதே
செல்வி நித்தியானந்தன்