சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

பிறந்த மனை

செம்மண் சுவருக்குள்ளே
நல்லதொரு இருப்பு
நாலாபுறமும் சோலைகள்
நல்கீற்றாய் சிறப்பு

பண்டிகை வந்தாலே
பணத்துக்கு சண்டை
பந்தாட்டம் போலவே
பலியாகும் தாய்மண்டை

ஆடலும் பாடலுமாய்
அரங்கேற்றம் காணும்
ஆவலாய் உறவுகள்
ஆனந்தம் கூடும்

சில்லறைசிதறுவதுபோல்
தற்கம் முற்றும்
சிரித்து சமாளித்து
ஓடியதொரு முற்றம்

மண்வீடு அடுக்குமாடி
மாற்றம் கண்டதே
மாபிளாய் நடைபாதை
மாறிப் போனதே

செல்வி நித்தியானந்தன்