நீரழிவு
விந்தையான உலகினிலே
விஞ்ஞானமும் அதிகம்
விழுதுகள்போல் பலருக்கு
விரும்பிடாத நோயினதுதாக்கம்
சிறுவர்முதல் பெரியோர்வரை
சிம்மாசனமான இருப்பு
சிக்கனமாய் கையாளல்
சிறந்ததொரு பொறுப்பு
இரத்தில்சர்க்கரையின் அளவு
இழப்பாய்தான் சேரும்
இன்சுலின் குளிசை தேவை
இரண்டாகவும் மாறும்
இதயநோய் பக்கவாதம்
இரத்தஅழுத்தம் கண்நோய்
இப்படியே கிட்னிவரைசெல்லும்
உணவுக்கட்டுப்பாடு நடைப்பயிச்சி
நீச்சல்பயிச்சி அவசியமாகும்
உருண்டோடும் உலகுனிலே
உறுதியான மூவகையாம்
உடலெடை குறைப்பும்
உறுதியான தீர்வாம்
யாரழிவார் நீரழிவால்
யாமறிவோம் மேதினியில்
யாக்கைதனை காத்திட்டு
யாவருமே வாழ்திடலாம்.