உயிர் நேயம் 549
ஒன்றேகுலம் ஒருவனே தேவன்
ஆன்றோர் அருளிய வாக்கு
ஒறறிவு தொடங்கி ஆறறிவு
மானிடமும் எப்போதும் காட்டனும்
அன்பு என்னும் நோக்கு
மகத்தான மாதமாய் புலர்ந்திட
மனித நேயத்தை விழித்தெழவைச்சு
மாண்புறவே மரம் செடி கொடி
புல்பூண்டு பறவை மிருகம் என
அழிக்காது அன்பாய் பேணி
உயிர்நேயம் காப்பது கடமையே
பிறருக்கு துன்பம் இழைக்காது
இயலாதவர்களின் கஷ்டத்தைப் போக்கியும்
இளகிய இதயமும் இரக்க சுபாவமும்
உறுதியான பல அரிய செயல்பாடும்
உயிர்நேயம் பலரைக் காக்குமே