சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

மலைப்பு

அவனியிலே ஆழுமை
அதிரவைக்கும் உண்மை
அங்காங்கே சாதனைகள்
அகிலத்தின் சரிதமாய்

சிறுவர்களின் சிந்தனை
சீரியதொரு போதனை
சீனவெடி போலவே
சீறித்தானும் செல்லுதே

ஆலமரம் போலவே
அருகெல்லாம் விழுதுகள்
தெருவெல்லாம் மாடிகள்
ஊரெல்லாம் மர்மமாய்

மடுக்கூட மேடாய்
மண்ணே இல்லாத
மாபிளுமாய் நடைபோட
மலைப்பாய் இருக்குதே