இன்றுமே காத்திருப்பு (581)
ஓட்ட ஓடியும் தேடிய போதும்
ஆட்டம் காட்டும் அரசியல் போக்கு
தேட்டம் அழித்தும் தேடும் உறவுகள்
தேங்கிய கண்ணீருக்குள் மெல்லவாழ்வு
துடிதுடிக்கும் உறவுகளின் சோகசுமைகள்
தாய் தந்தை உறவின் பிரிவுகள்
தரவுப் பட்டியலின் நீள வலிகள்
தாங்கமுடியா வேதனை வடுக்கள்
இன்று நாளை என எண்ணிய விடியல்
இரண்டாயிரத்து இருபத்திமூன்றும் நகரவே
இலங்கைத்தீவில் இப்படிச் கொடூரச் சுவடும்
இரகசியமாய் கைதானவர்களின் நிலைமறைப்பே
இன்னும் எத்தனை நாட்கள் வேதனைவலியில்
வலியுடன் விழிமேலே காத்திருக்கும் கண்களே