வியாழன் கவிதை

Selvi Nithianandan

ஏன் இப்படி (580)
மூளை என்ற பொக்கிசத்தில்
மூட்டையாய் பலவேதனை
முடிச்சு அவிட்டுபோட்டாலும்
முடியாத வேதனை தொடராய்

எண்ணங்கள் ஒருபுறம் தோன்ற
ஏங்கங்கள் மறுபுறம் கொண்டிடும்
வண்ணமாய் அமைத்திட முயன்றுமே
வசந்தமாய் துளிர்ரெழ முடியலையே

நான்கு சுவருக்குள்ளே பெருமூச்சு
நட்டநயம் அறியா கேள்வியும்
நாலும் மெல்லநகர்வுடன் செல்ல
நாணய வார்த்தையும் அதிகரிக்கும்

அகவை அதிகரிக்க ஆளுமைகுன்றிட
அன்பும் அமைதியாய் மெல்லவே பணிந்திட
அவனியில் எம்மைவிட எத்தனை மானிடம்
மீளமுடியா சோகத்தில் சிந்திக்கின்றேனே