வியாழன் கவிதை

Selvi Nithianandan

விடுமுறை வந்தாலே (578)

விடுமுறை வந்தாலே
அகமும் மகிழ்சிபெற்று
உறவுகளும் ஒன்றாகி
இல்லமும் கலகலப்பாகும்

வெளியில் கூட்டமும்
வெயிலில் இருப்பும்
கடற்கரை ஆறுகள்
கண்ணை கவரும்

நண்பராய் சேர்ந்து
விரும்பிய உணவை
வெளியிலே உண்டு
வனப்பாய் கழிப்போம்

உழைபின் களைப்பு
உன்னத நிறைவு
ஊக்கமே உழைப்பு
உரமே இன்றும்.