சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

மார்கழி

மார்கழி வந்தாலே
வந்துவிடும் கழிப்பு
மகத்தான தினமாய்
யேசுவின் பிறப்பு
மானிடம் போற்றும்
மேன்மையின் சிறப்பு
மகியிலே கொண்டாடும்
ஆனந்த விருப்பு

தெருவிலே சுடர்விடும்
விளக்கின் அலங்கரிப்பு
திசை எங்கும்
மரங்களாய் இருப்பு
தென்றலும் வருடி
குளிராய் நிலைப்பு
தெம்மாங்கு இசையாய்
பாடலும் சிறப்பு

ஆழிப்பேரலை வடுவும்
வந்திடும் நினைப்பு
ஆசியாவையே புரட்டிய
உயிர்களின் குவிப்பு
அவதியாய் இன்னுமே
மக்களின் தவிப்பு
அகத்தின் வலிகள்
அணையா விளக்காய்

செல்வி நித்தியானந்தன்