சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

இயற்கை
அண்டத்தில் தோற்றம்
ஆதாரமாய் உயிரினம்
அறிவியல் ஆராய்ச்சி
இயற்கையின் சான்றாகும்

கடல்கள் மலைகள்
காடுகள் பாறைகள்
ஆறுகள் தீவுகள்
பஞ்சபூதங்கள் பலவாகும்

இயற்கையை அழித்து
செயற்கையாய் உருவாக்கம்
இயந்திர வாழ்வில்
உணவே மருந்தாகும்

இயற்கையின் பிடியில்
இறைவனின் நியதி
இடையூறு செய்யின்
இறுமாப்பு விளைவாகும்