சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

மூண்ட தீ

எழுபத்தைந்து ஆண்டின் வரலாறு
ஏகாதிபத்திய ஆட்சியின் விளைவு
ஏராளமான தீயின் வெளிப்பாடு
எரிந்து சாம்பல் ஆனதே

சுதந்திரமடைந்த நாட்டிலே
சுவாலை யாகும் போதிலே
சுருண்டு வீழ்ந்த மானிடம்
சுக்கு நூறாய் சிதறியதே

எத்தனை கொடிய விசக்கிருமிகள்
அத்தனை உள்நோக்க அழிப்புக்கள்
மூண்டதீயில் மாண்ட நூலகம்
மீண்டும் உயிர்த்து எழுந்ததே

கலவரம் என்றாலே தீவைப்பு
கடைஎரிப்பு வந்திடும் நினைவு
நிலவரம் மாறாத வடுக்கள்
நித்திலமும் மாறியதே அனலாய்.