பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும் ( 571)
ஆண்டுகள் பலவாய் கடந்திட்டாய்
மீண்டுமாய் பொலிவாய் வந்திட்டாய்
வெண்ணிறப் பூச்சின் அழகினிலே
வெந்தணல் என்றும் அழியாதே
பற்பல நூல்களும் அறிவுக்கு
பண்டைய நூல்களும் தெளிவுக்கு
அடுக்குகள் கவருமே கண்ணுக்கு
அடிக்கடி போவரும் பலருண்டு
பலரது உதவியின் கையிணைவு
பணமாய் நூலாய் பகிர்ந்தளிப்பு
பலஆயிரம் நூல்களாய் எரிப்பு
பழமையான சுவடிகள் அழிப்பு
புனரமைப்பு பெற்றதே மீண்டும்
புத்துயிராய் கிடைத்ததே இன்று
புகழுடன் இருப்பதும் நன்று
புகலிட வாழ்விலும் மறக்காத சிறப்பு.