வியாழன் கவிதை

Selvi Nithianandan

அழகு (570)

அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்
அனுபவித்து பழகு
அருமை புரியும்

வானத்து ஓவியம்
வண்ணமான காவியம்
வசீகரமான ஈர்ப்பும்
வசப்படும் மானிடம்

பூக்களின் அழகும்
பட்சியின் குரலும்
தருக்களின் விரிப்பும்
தரணியின் உயர்வு

மழலை மொழியும்
கொள்ளை அழகு
அஞ்சுகப் பேச்சு
ஆனந்த உச்சம்

பாரினில் இயற்கை
பரவச எழிலோ
பார்த்து மகிழ
பிறந்திட்ட பிறப்பே