[10:23, 26-11-2022] SELVI: நினைவு நாள்
பிரிந்தவர் நினைவு
வந்திடும் வேளை
பீறித் தானே
கண்ணீரும் வடியும்
பிறப்பும் இறப்பும்
ஆண்டவன் நியதி
பின்னிப் பிணைந்த
விதியின் சதி
அகத்தின் சுமைகள்
ஆறாத வலிகள்
ஆழமாய் மனதில்
அழியாத வடுக்கள்
அன்பாய் அழைத்திடும்
அற்புத உறவு
அழிந்ததே எதிரியால்
சிதறிய பிரிவு
வீட்டிற்க்கு வந்துட்ட
மூத்த மகவு
விரும்பியே ஏத்திட்ட
வேங்கையாய் சிறப்பு
பிரதீபன் நாமமாய்
பெற்றவர் ஏற்பு
விமலனாய் மாற்றியே
பதிவிட்ட பொறுப்பு
காலங்கள் ஓடியே
சென்றிடும் வேளை
கனவுகள் தாகங்கள்
என்றுமே நிலைக்குமே
செல்வி நித்தியானந்தன்