சித்திரை வந்தாலே (565)
சித்திரை வந்துவிட்டால்
நித்தரையும் குறையும்
எத்தரையும் ஓளியாய்
எழிலாய் காட்சிதரும்
ஆலயங்கள் விழாக்கள்
வரிசையாய் வந்திடும்
அகவை கொண்டாட்டமும்
அடுத்து சேர்ந்திடும்
சித்திரை வரவும்
எழிலாகும் எண்ணம்
சித்திரமாய் கொள்ளையிடும்
மலர்களின் வண்ணம்
ஆதவனின் கதிருக்காய்
வெளியேயும் ஓடல்
ஆனந்தமாய் கிடைக்கும்
விற்றமீனும் நாடல்
சித்திரை வருடமும்
பலருக்கு மகிழ்வு
முத்திரையாய் சீர்பெற்று
பிறக்கட்டும் சிறப்பாய்