சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

தவிப்பு
பள்ளிப் பருவத்திலே
தந்தையின் இறப்பு
படிப்பை தொடராது
படுத்திய தவிப்பு
மாரடைப்பால் இறந்த
சகோதரி இழப்பு
அடுத்து தொடரவே
விமானத் தாக்குதலில்
மருமகன் பலியானதும்
நான்கு வருடத்தை
நல்தாங்கிய அம்மாவின்
இறப்பும் தவிப்பாய்
புலத்து வாழ்வில்
யாரும் அற்றவர்களாய்
தனித்து வாழ்வது
தவிப்பாய் என்றும்