தலைசாய்ப்போம் (547)
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்
கார்த்திகை வந்தாலே
கண்ணீரும் சொரிந்துவிடும்
காந்தள் மலர்ந்தாலே
கல்லறை நிறைந்துவிடும்
காரிலும் சூழ்ந்திடும் வீரருக்கு
காசினி பொழிந்திடும் தூறலுக்கு
காலமும் ஓடியே சென்றாலும்
ஞாலத்தில் நிலைத்த காவியமாகும்
தாய் மண்ணைக் காப்பதற்காய்
தம் உயிரை மாய்த்தனரே
நம் உயிர் உள்ளவரை
உம் உயிரினை நாமறவோம்
காடுமேடு பாரது காத்தீரே
கனவுகள் என்றுமே நிலைத்திடவே
உம்வரவை எண்ணி என்றுமே
உமக்கய் தலைசாய்து வணங்குகின்றோம்