வியாழன் கவிதை

Selvi Nithianandan

மனங்கள் (562)

போட்டியாக பலரது குணங்கள்
ஈட்டியாக குத்தும் ரணங்கள்
பொறுக்க முடியா வார்த்தைகள்
பொறுமை குலையச் செய்யும்

சொந்தம் பந்தம் கூட
சொல்லில் விசம் துள்ளும்
சொட்டு சொட்டாய் சொரிய
சொக்கித் தானே நானும்

பணம் என்னும் தேட்டம்
பந்தா காட்டி நாட்டம்
குணம் மாறி ஓட்டம்
குள்ள நரியாய் ஆட்டம்

புலத்து வாழ்வில் புகழ்ச்சி
புலம்பி புலம்பி தேர்ச்சி
புழுங்கி புழுவாய் முயற்சி
புதுமை படைக்கும் மனிதம்