சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

விடியல்

ஆதவனின் விடியல்
அவனிக்கே மகிழ்வு
ஆனந்தமாய் இருக்குமே
அற்புதச் சிறப்பு

கிழக்கின் உதயம்
மேற்கின் மறைவு
வடக்கு தெற்கு
திசையும் இணைவு

விடியலின் மலர்வில்
பூக்களும் மலரும்
விசும்பின் ஒளியால்
விருட்சமும் மகிழும்

விடியும் காலை
விருப்புடன் எழுந்து
பொறுப்பாய் நடந்து
பெருமிதம் கொள்ளு

செல்வி நித்தியானந்தன்