வியாழன் கவிதை

Selvi Nithianandan

தன்நிலை மறந்ததேனோ (541)

தேடித்தேடி ஓடும் வாழ்வு
தேங்கிய நீரைப் போலாகி
ஓடிஓடி பதறும் உறவுகள்
வாடி நிற்க்கும் நிலையையுணரா
மூடி மறைக்கும் வார்த்தைதானோ

தாயக வாழ்வில் தாங்கிய உறவுகள்
தனித்து இல்லா கைகோர்த்திடும் நிலையும்
சுற்று சூழல் சொந்தபந்தம் இன்றும்
சுழல் காற்றுப் போல ஓடிநிற்குதே

கற்றுத் தந்த பாடங்கள் ஏராளம்
களிப்பு கொண்டு செல்லுதே தாரளம்
புலத்து வாழ்வு பிணைப்புக்கள் இப்போ
புலம்பி புலம்பி போகுதே நல்லாய்

தனித்து வாழும் இணைப்புக்கள் கூட
தள்ளி நின்று வேடிக்கை பார்க்குதே
தஞ்சம் என்று பரிவு சொல்லியே
பஞ்சம் உரைத்து பவனி போகுதே