சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

ஒன்று பட்டு
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஆன்றோர் வாக்கு அன்று
ஒற்றுமையே பலமாய் இருந்தால்
ஒருமித்தே மகிழலாம் இன்று

ஐந்தறிவு கொண்ட ஜீவனும்கூட
ஒற்றுமை பலத்தை காட்டிநிற்கும்
ஆறவுகொண்ட மனிதர்மட்டும்
பிளவு பட்டு நிற்பதைக் காண்போம்

புலத்து வாழ்வில் போட்டி பொறாமை
புடம் போட்டு பார்க்கும் மனிதம்
வடம் இழுக்க சேர்வில் நாமும்
வலிந்து இணைவில் செல்லல் வேண்டும்

ஒன்றாய் கரமும் இணைந்திட்டாலே
ஓசைகூட சத்தமாய் இணையும்
நன்றாய் வாழ்வு அமைந்திடவே
நற்பணி செய்து வாழ்ந்திடலாமே

: செல்வி நித்தியானந்தன்