சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

தீ

பஞ்ச பூதங்களில்
ஒருவராய்
பரணி கார்த்திகை
விளக்கானாய்
பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தானாய்
பரவசமாய் இறைவனுக்கே
ஒளியாவாய்

ஆதியிலே கல்லிலே
பிறப்பானாய்
பாதியிலே நவீன
விளக்குமானாய்
ஜாதி பேதம்
நீயறியாய்
ஜோதி உன்னை
தொழுகின்றோம்

அவனியிலே பலபெயரில்
வலம்வருகிறாய்
அடுத்தவர் மனதையும்
பற்றவைக்கிறாய்
ஆலயங்களில் தீச்சட்டியாய்
எரிகின்றாய்
அக்கினியாய் இறுதியிலும்
சங்கமமாகின்றாயே

செல்வி நித்தியானந்தன்