வியாழன் கவிதை

Selvi Nithianandan

புலத்திலும் தொலைத்த பாசம் ( 539)

பணத்துக்காக ஓடும் வாழ்வு
பாசம் என்ற வேசம் காட்டி
பரிதவிப்பில் வாழ்வும் வாடி
பரிவு இப்போ இருளாய் மூட்டம்

புலத்து வாழ்வில் மாற்றம் கூடி
புலம்பி புலம்பி வித்தை காட்டி
புயல் காற்றாய் புகழாரம் சூட்டி
புவனத்தில் பவனியாகும் கூட்டம்

பணமென்றால் இணைவு பெருகி
இல்லை என்றால் உறவு விலகி
அக்கா தங்கை பந்தம் எல்லாம்
அன்பு பாசம் அறுத்த திட்டம்

சொந்த பந்தம் தொலைத்த போதும்
சொன்னா உதவ பணமே மூச்சு
பக்க துணையாய் இப்போ பலராய்
பரிதவிப்பில் வாழ்வும் நகர்வே