சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

மழை நீர்
இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்று
இலவசமாய் கிடைக்கும் நீரினாலே
இதனாலும் இப்போ சேமித்தல் நன்று
இல்லத்தில் குடிநீர் , கால்நடை, கழிவுநீராய்
பயன்படுத்த உதவும் சிறப்பாகும்

வீடுகள்,கட்டிடங்களில் மேற்கூரைகளில்
கூம்புவடிலே வடிவமைப்பு செய்தும்
தரைகளிலே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும்
தொட்டியாகவும் மின்சாரஉற்பத்திக்கும் உதவுதே

அம்மாவின் ஆட்சியிலே மழைநீர் திட்டமாய்
கொள் கலன்களிலும் வாய்க்கால் மூலமாயும்
வடிஅடுக்கில் சேமித்தும் வைக்கவும்
மழைநீரானது மானிடருக்கு பயன்பாடாகுதே