மாட்சிமை மிக்க மகாராணி
ஆட்சி அசராத ராணியாய்
அவனியிலே பல நாடுகளாய்
ஆளுமையில் தனிச்சிறப்பாய்
ஆண்டாரே இராச்சியமாய்
புன்னகை வதனமும்
பூரிப்பான தோற்றமாய்
புகழுடன் இறுதிவரை
புவனத்தில் வாழ்ந்தவரே
எழுபது ஆண்டுகாலச் சரித்திரம்
ஏற்கமுடியா இறப்பின் விசித்திரம்
எண்ணற்ற மக்களின் கண்ணீரின்சோகம்
எல்லாமே ஏற்க மறுக்குதே இப்போ