சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

தந்தையின் நினைவுநாளிலே
காலங்கள் மெல்லென
கடந்தும் போச்சுது
கனதியாய் நெஞ்சமும்
கருகித்தான் செல்லுதே
பாலமாய் இருந்தவரும்
பாதியிலே பிரிந்திடவே
ஞாலத்தில் பலஉயிர்கள்
தவித்திடும் நிலையன்றோ

நாற்பத்து ஏழு ஆண்டும்
நாடித்தான் வந்திடவே
நாட்டமாய் நாமும்
நல் உபாசம் இருந்திடுவோம்

கால்வீக்கம்மென்று வைத்தியசாலை செல்ல
கையிலே போட்ட ஊசியாலே
கட்டான உடலும் கோமாவில் போக
கடைசியில் உயிரற்ற செய்தி
காதினிலே கேட்டதுதான்
இன்றுமே என் மனதினிலே

சொந்தங்கள்கூட ஓடித்தானும் போச்சு
பரிவும் இல்லாது பழிகூடச் ஆச்சு
பணமென்ற வேசம் ரணமாய் தானும்
பகடுவாழ்வு எல்லாம் திரும்பியதேஇப்போ