விடிவு
நாளை என்பது விடிவே
நாளும் நடக்கும் முடிவே
நாட்டு நிலைமை எதுவோ
நல்ல செய்தி வருமோ
அச்சம் கொண்ட வாழ்வு
ஆகாரம் இல்லா சோர்வு
அறிய முடியாத் தெளிவு
அதுவே இப்போ உணர்வு
வீட்டுக்குள்ளே முடங்கிய சரிதம்
வீதிக்கு வரவே இப்போ துரிதம்
வீணாய் தானே இறக்கும் வீதம்
வீராப்பாய் மறைக்கும் பெருமிதம்
நாளை என்பது யாரதுகையில்
வேளை முடிந்தால் போகணும் பிடியில்
காலை மாலை வந்திடும் நிலையில்
தோழமை போல காத்திடு உலகில்