வியாழன் கவிதை

Selvi Nithianandan

உலகாளும் நட்பே 0 525)

புவனத்தில் பலமாய் பலவீனமாய்
பூத்திடும் நட்பு, தோழமை , சினேகம்
இருவரிடையே அன்றி பலரிடையே
இணைவாய் ஏற்படும் ஓர் உறவாகும்

இனம், வயது, மொழி, நாடு இன்றி
இன்பதுன்பம் தானுனர்ந்து உணர்வுதனை
நேரடியாய் மறைமுகமாய் பேனா நட்பாய்
மின்னஞ்சலாய் பகிர்ந்திடும் இணைவாகும்

பூக்கள், வாழ்த்தட்டைகள், பரிமாறியும்
புன்னகையுடன் நேரத்தை செலவழித்தும்
பராகுவேயில் முதலில் முன்மொழியப்பட்டும்
பன்னாட்டு நட்பு நாளான தொணியாகும்

பள்ளிப் பருவம் முதலே தொடரும் நட்பு
இரயில் சிநேகிதமாய் வழித்தடமாறியும்
பக்க துணையாய் பவ்வியமாய் நின்று
பாரினில் பலரது வாழ்வை மாற்றியதும் நட்பே

உண்மையான நட்பு உறுதியாய் இருக்கும்
உளமாற நேசித்தால் உலகினை ஆளும்