தொலைந்ததா அல்ல தொலைத்ததா 523
நாட்டை பிடிச்ச சனியனும்
நாலு திசையாய் பறக்குது
நன்றி கெட்ட நாட்டாமை
நல்லாய் வாலை ஆட்டுது
இரவோடு இரவாய் திட்டம்
இணைவாேடு துணையும் ஓட்டம்
இல்லத்தில் சொகுசு ஆட்டம்
இப்போ இருதலைகொள்ளி நாட்டம்
பாதுகாப்பு இல்லம் படையெடுப்பு
பதுங்குகுழி இரகசியஅறை கண்டுபிடிப்பு
பதுக்கிய பணம் ரொக்கமாய் எடுப்பு
பதவி முடியுமுன் மக்களால் எச்சரிப்பு
அண்டை நாடுகளுக்குள் தஞ்சம்
அவதியாய் தீர்த்ததே வஞ்சம்
மண்டை பலருக்கு போராட்டம்
மண்ணிலே என்றும் திண்டாட்டமே.