சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

அரிக்கன் லாம்பு

அந்திசாயும் நேரம் வந்தாலே
அன்றாடம் பளபளக்கும் சிமிலிலாம்பு
அம்மாகையில் எண்ணெய்போத்தல்
அந்தக்கால நினைவு ஞாபகமூட்டும்

குடிசைவீடு மின்சார வசதியுமில்லை
குப்பிவிளக்கு பித்தளைவிளக்கு துணையாய்
கும்மென்ற இருட்டு நினைத்தாலே நடுக்கம்
குசினிக்குள்ளே ஒளி பிரகாசமாய் இருக்கும்

விளக்குத்திரி சரிசெய்தும் திரி கட்டையானால்
விளக்கம் சொல்லி போட்டுத்தரும் அம்மா
விடிந்து விட்டா கரிப்பிடித்த சிமிழியை
வீபூதி போட்டு நித்தம் துடைக்கச் சொல்லும்

குட்டுவாங்கி குத்துவாங்கி படிக்க உதவியதும்
கும்மாளம் போட்டு நடிக்க நாடியதும்
குவலயத்தில் பலபேருக்கு மீண்டும் கைகொடுத்து
ஒளியேற்றும் அற்புத விளக்கு அரிக்கன் விளக்கே