உலகப் பூமிபந்தில் நானும் (522)
சுற்றிச் சுழலும் பூமியிலே
சுட்டெரிக்கும் சூரியனும்
சுடராய் மிளிரும் சந்திரனும்
சுந்தரமாய் ஒளிரும் நட்சத்திரமும்
சுமையென இல்லாது இயற்கையுடன்
ஒன்றித்து வாழுதே பலமாய்
இயற்கையுடன் செயற்கையும் இணைத்து
இல்லறத்தில் நல்லறம் பிணைந்து
இறப்பு குறைந்து பிறப்பின் அதிகரிப்பு
இனங்கட்ட ஐக்கியநாட்டின் முடிவும்
இறுதியில் விழிப்புணர்வாய் வருகுதே
மக்கள் தொகையில் பெரும் வளர்ச்சி
மண்ணிலே நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி
மாசடைவு அத்தியாவசிய தேவை இதனாலும் தாக்கம்
மானிடத்தின் சீர்கேடு பாரிய தொடரும் நெருக்கடியாய்
பணம் பணம் என்ற பகடைகாய்களை நகர்த்தி
பற்றாக்குறைக்கு பலஉயிர்களை அழித்தும்
பண்டமாற்று போல நாட்டினை வித்தும்
பசிஆறும் சமூகத்தில் பிறந்திட்ட நானும்
அழுவதா எண்ணி ஆற்றுப்படுத்தவா
புரியாத புதிராய் இன்றுமே