பிரிவு
நான்கு வாரமும் கடந்து
நாளும் மெல்லென நகருது
நாட்டியம் நிகழ்வு என்றிட்டா
நல்பாங்குடன் முதல் நிற்பார்
பெண்ணியம் அவரின் பேச்சு
கண்ணியம் செயலின் வீச்சு
மண்ணிலம் எனும் மூச்சு
மடிந்ததே உயிரின் மூச்சு
பல்திறன் ஆக்கம் வெளிப்பாடு
பா வடிப்பதில் தனித்துவ கோட்டுபாடு
புன்னகை வதனம் கண்ணோடு
புற்றுநோய் தாக்கமும் அவரோடு
பா முகத்து உறவுவாென்றின் பிரிவு
பக்கபலம் இழந்ததிட்ட சரிவு
படைப்பாளி ஊக்கிவித்த நிகழ்சி
பார்போற்ற வாழுமே நாளும்