சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

உறவுனது புலம்பல்
அத்தியாவசிய பொருட்களின் ஏற்றம்
அன்றாடம் விலைகளில் மாற்றம்
ஆட்சிப்பிடியில் அயராத தாகம்
அப்பாவி மக்கள் பீதியிலே சோகம்

ஒருவேளை உணவிற்காய் திண்டாட்டம்
ஒருசாண் வயிற்றிக்காய் போராட்டம்
ஒப்பந்த வரிசையிலே காத்திருப்பு
ஒழுங்கினை மீறியும் கைகலப்பு

ஐந்து நாளும் முழுநேர வேலை
ஜயகோ வாரநாளிலும் வீட்டிலுமில்லை
ஐந்து சதமும் மிச்சிதுமில்லை
ஐயப்பாடாய் வாழ்வு போகுதே