உப்பு (519)
அறுசுவையில் ஒன்றானாய்
அத்தியவசிய தேவையானாய்
அடிப்படை கனிமமாய்
ஆரோக்கிய ஊட்டச்சத்தாய்
ஆபத்தை விளைவிப்பதாய்
ஆவியாக்கி உப்பளஉற்பத்தியாய்
உணவை பாதுகாப்பதற்காய்
உலகிலே பயன்பாடாம்
கடல் உப்பு, தரை உப்பு
கிணற்று உப்பு, ஏரி உப்பு
அமில உப்பு, கார உப்பு,
கல் உப்பு, தூள் உப்பு
இரட்டை உப்பு.அணைவு உப்பு
இந்து எனபலவகையாம்
பலவர்ண நிறங்களாய் இருக்கிறாய்
சோடியம் , அயோடின் ,பொட்டாசியம்,
மெக்னீசியம், பாஸ்பரஸ், குரோமியம்,
இரும்பு, துத்தநாகம், சத்துக்களானாயே.