பா முகம்
பார்ரெல்லாம் பா முகம்
பார்போற்றும் பரவசம்
படைப்புகள் பலவிதம்
பாராட்டு தனிரகம்
புலத்திலே பூத்தது
புதுவடிவமாய் மிளிருது
புதுமைகள் படைக்குது
புலகாங்கிதம் அடையுது
சிறுவர்களின் ஆக்கம்
சிட்டுக்குருவியாய் ஊக்கம்
சிகரமாய் தொகுப்பில் சாதனை
சிதறமால் அடைந்திடலாம் இலக்கின்நோக்கம்
உருவாக்கும் ஊடகத்தின் பதிப்பு
உவகையால் பலரக தொகுப்பு
பயிற்சியும் முயற்சியும் சிறப்பு
பதியமிடுவோம் உச்சத்தின் மதிப்பாய்