அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள் 518
அயராத பலரின் உழைப்பு
ஆர்வலர் ஆதரவின் சிறப்பு
அரை நூற்றாண்டின் அண்மிப்பு
அயோக்கியர் பலரால் எரிப்பு
ஆசியாவின் மிகப்பெரிய நூலகம்
அரிய தொன்னூற்று ஏழாயிரம் படைப்பு
ஆயிரத்து எண்ணூறு ஓலைச்சுவடி குறிப்பு
ஆவணங்கள் அனைத்தும் சிதைப்பு
தினசரி பலருக்கு உதவியதும்
தினம் தினம் நினைவூட்டுவதும்
தீயினால் எரிந்தது மனிதநேயம்
கீறல் பட்டது மனிதமனம்
புதிதாய் மீள் கட்டுமானத் பணிப்பு
பதினெட்டு ஆண்டு மீண்டுமாய் திறப்பு
மறக்க முடியாமல் பலரும் தவிப்பு
மாதம் வந்தாலே நிலலாடும் நினைவே