தீயில் எரியும் எம் தீவு
நாட்டு நிலைமை என்னாச்சு
சாட்டு இப்போ குழப்பியாச்சு
நாலா பக்கம் சிதறியாச்சு
நரிகள் இப்போ மாறியாச்சு
குடும்ப ஆட்சியில் சூடுபிடிப்பு
குடிமக்களும் குழப்பத்தில் பதகளிப்பு
சட்ட ஒழுங்கு தவிடுபொடியாச்சு
சடுதியாய் எல்லமே மாறியாச்சு
ஆட்சியாளரின் வீடுகளும் எரிப்பு
அவசரகாலச் சட்டமும் நடிப்பு
ஆட்சிப் பிடியில் அனல்வெறியாட்டம்
ஆவணங்களை எரித்து கொலையாட்டம்
பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும்
பணத்தை திரட்டி பக்கவாய் ஒழிப்பு
பதின்மூன்று ஆண்டின் முள்ளிவாய்கால் இழப்பு
பஷ்மமாய் இப்போ எரியுது நாடே