வியாழன் கவிதை

Selvi Nithianandan

விடியலைத்தேடி 514

விடியலின் பொழுது
மகிழ்ச்சியாய் கழியுது
விசும்பின் அழகும்
சுழற்சியாய் மாறுது

மரங்களின் அசைவும்
தென்றலாய் இருக்குது
மலர்களின் வண்ணமும்
கண்ணைக் கவறுது

சூரியக் கதிருக்காய்
வெளியை நாடுது
சூடு தணிக்கவும்
மோரைத் தேடுது

உப்பைக் குறைத்து
உணவு செல்லுது
உபாதி கழிக்க
நடையாய் செல்லுது

உடல்நலம் பேணவும்
உறுதியாய் சொல்லுது
உளநலம் இல்லாத
மருத்துவம் நாடுதே

மாதமும் தொடரவே
ஒவ்வாமை சேருது
சேதமும் இல்லாத
மருந்தினை நிறுத்தியே