சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

தொழிலாளி
மேதினியில் வந்திடுவாய்
மேஒன்றாய் சென்றிடுவாய்
மேலோர் கீழோர் பாகுபாட்டை
மேன்மையுற தொழிலில் உடைத்திடுவாய்

உழைப்பு என்றும் மூலதனம்
உந்து சக்தியாய் சாதனம்
உயர்ந்து செல்லும் வேதனம்
உறுதியாய் நின்றிடும் ஆதனம்

கடவுள் ஒருவனே முதலாளி
கண்டு கொண்டவர் தொழிலாளி
காசினியிலே பலரும் கூட்டாளி
கட்சியாய் இயங்குது பாட்டாளி

குறிப்பிட்ட வயதை கொண்டதாய்
குழுவாய் அதிகார ஆர்ப்பாட்டமாய்
குவலயத்தில் பலருக்கு விடுமுறையாய்
தொழிலாளிக்கு நன்றியாய் மே வந்திடும்