வேண்டும் வலிமை (513)
பாமுகப் பந்தலில்
பலவகை குழந்தைகள்
பார்போற்ற படைத்திடுவர்
பலரக வித்தைகள்
ஊக்கமும் கொடுத்து
ஊக்குவிக்கும் ஆசான்
உற்சாகம் பொங்கிட
உறுதுணையாய் பெற்றவரும்
வலிமையான புலமையின் நியதி
வளர்த்தெடுக்கும் திறமையின் உறுதி
வலிகளும் அறியாத அகத்தின் துணிச்சல்
வாய்மையும் குன்றிடா வார்த்தையின் பாய்ச்சல்
வளர்ந்திடும் விதைகளும் விருட்சமாய் தொடரட்டும்