மீளவும் வந்ததே
கோடை என்றாலே வந்திடும் மகிழ்வு
ஜாடை காட்டும் பூக்களின் சிறப்பு
கொண்டாட்டங்கள் மீண்டுமாய் மிடுக்குடன் நிகழ்வு
திண்டாட்டமாய் வந்திடும் கொரனாவின் அதிகரிப்பு
முகமூடி இல்லா கூட்டமாய் சேர்வு
கையுறை அற்ற கைகுழுக்கி பிரிவு
இருமல் தடிமன் மீண்டுமாய் சோர்வு
இதனாலும் இப்போ வந்திடும் சாவு
ஐரோப்பிய நாடுகளில் விடுமுறைச் சுற்றுலா
ஐயம் தவிர்த்து ஐக்கியமாய் கூடுதே
நிறுத்திய பயணங்கள் மீண்டும் தொடருதே
நீள்வரிசையாய் காத்திருந்து மக்களும் போகுதே
நான்காவது தடுப்பூசிக்காய் பலருக்கு அழைப்பு
நாட்டம் குறைந்து போதுமே எனும் நினைப்பு
நாடுகளிடை புதிய பெயருடன் வரவு
நானிலத்தில் தொலைந்துவிடு அருள்கொடு இறைவா