வியாழன் கவிதை

Selvi Nithianandan

நாட்டு நடப்பு

நாட்டிலே திடீர்மாற்றத்தின் திருப்பம்
நாதியற்ற பலரின் வெளிவேடம்
நடுவீதி மறித்து மக்களும் போராட்டம்
நல்கோஷம் செய்தும் ஒற்றுமையான ஆர்ப்பாட்டம்

பதவி மோகத்தால் குடும்பம் ஆடுது
பக்க பலமாய் பணமும் இருக்குது
படை பலமும் காவலாய் நிற்க்குது
நடை முறையாய் கூட்டு சேர்க்குது

இரவோடு இரவாய் விலைவாசி ஏற்றம்
இடியோடு மின்னல் வந்ததும் மாற்றம்
இல்லத்திலே உணவின்றி இயக்கமில்லா தோற்றம்
இன்பத்தை தொலைத்து நடைப்பிணமாய் சீற்றம்

ஐனாதிபதி பிரதமருக்கிடையில் ஏற்படும் பிளவு
புதிய அமைச்சர்கள் திடீர் பதவிஏற்ப்பு
விமான நிலையங்கள் குத்தகைக்கும் விற்பனை
விறுவிறுப்பாய் முடித்துவிட்டு தப்பிஓடும் சிந்தனையோ