எதிர்ப்பு அலை
தமிழ்பேசும் இனத்தின் சாபம்
தட்டிக் கேட்டாலே கோபம்
தரம்கெட்டு ஆளுது அரசு
தக்கவைக்க போடுது கூத்து
ஒற்றுமையாய் போராடும் நீதி
ஓங்கி ஒழிக்கட்டும் நியாயம்
ஒதுக்கிய பணமெல்லாம் பதுக்கம்
ஒதுக்கிடம் தேடும் நோக்கம்
பதவி விலகாத திட்டம்
பாதுகாப்பு இல்லாத சட்டம்
குடும்ப ஆட்சியால் தொல்லை
குவலயமே பிரளயமாகும் நிலைமை
ஒருசாண் வயிற்காய் பலர்போராட்டம்
நாட்டையேவித்து குடும்பமே கொண்டாடம்
நல்லாட்சி எனநம்பி வாக்களித்தவரும்
நடுவீதிக்கு வந்த நிலைபாரீர்