என்ன விதியோ
புதுவருடம் பிறந்தாச்சு
புன்னகையும் தொலைச்சாச்சு
புலம்பலும் தொடராச்சு
புலத்திலே நிலையாச்சு
பணம் என்னும் போராட்டம்
பசி என்ற திண்டாட்டம்
பஞ்சத்தால் பலர்வாழ்வு
தஞ்சத்தால் புலம்பெயர்வு
பள்ளியும் விடுமுறை
படிக்குமா தலைமுறை
பகுதிநேர மின்வெட்டு
பரிவுமற்ற கரண்கட்டு
கற்கையும் கணனிமயம்
கைவிளக்கும் அரங்கேற்றம்
களிப்பற்ற மக்களிடை
கைகொடுக்குமா அரசும்